ADDED : ஆக 02, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: வாடிப்பட்டி பேரூராட்சி 18 வார்டுகளில் 1 முதல் 9 வரை உள்ள வார்டில் 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு திட்ட முகாம் நடந்தது. எம்.எல்.ஏ., வெங்கடேசன் துவக்கி வைத்தார்.
பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மணிகண்டன், தாசில்தார்கள் ராமச் சந்திரன், பார்த்திபன், பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன், துணைத் தலைவர் கார்த்திக் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் ஜெயலட்சுமி வரவேற்றார்.
தி.மு.க.,ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன், முன்னாள் நகர செயலாளர் பிரகாஷ், கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், பூமி நாதன், கார்த்திகா, இளை ஞரணி வினோத், தகவல் தொழில்நுட்ப அணி அரவிந்தன் உட்பட பலர் பங்கேற்றனர். மொத்த மனுக்கள் 1161ல் 512 மனுக்கள் மகளிர் உரிமை தொகைக்காக பெறப்பட்டது.