/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கருணை அடிப்படையில் வேலை தொ.மு.ச., வலியுறுத்தல்
/
கருணை அடிப்படையில் வேலை தொ.மு.ச., வலியுறுத்தல்
ADDED : டிச 03, 2024 05:47 AM
திருமங்கலம்: நகராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தில் வேலை செய்து பணியின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு கல்வித் தகுதிக்கு ஏற்றார் போல் கருணை அடிப்படையில் அரசு பணி வழங்குவது வழக்கம்.
கடந்த 2023 நகராட்சி நிர்வாகத்தில் வெளியிட்ட புதிய விதியில் 10க்கும் மேற்பட்ட பல்வேறு விதமான பதவிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் கல்வி தகுதி இல்லாத வாரிசுகளுக்கு எவ்வித பதவியும் வழங்காமல் ஓர் ஆண்டுக்கும் மேலாக நகராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது. எனவே புதிய நகராட்சி விதியில் திருத்தம் செய்து தமிழகம் முழுவதும் உள்ள 450க்கும் மேற்பட்ட வாரிசுகளுக்கு உடனே கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என தமிழ்நாடு நகராட்சிகள் தொ.மு.ச., வின் சார்பில் தலைவர் நடராஜன் நகராட்சி நிர்வாக ஆணையர் சிவராசுவிடம் மனு அளித்தார்.
அவருடன் மாநிலத் தலைவர் கார்த்திகேயன், பொதுச் செயலாளர் ஹரிதாசன், இணை பொது செயலாளர் வேலு, இணை செயலாளர் கருணாநிதி உட்பட பலர் இருந்தனர்.