/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சாமநத்தம் ஊராட்சியில் ரூ.3.16 கோடியில் பணிகள்
/
சாமநத்தம் ஊராட்சியில் ரூ.3.16 கோடியில் பணிகள்
ADDED : அக் 14, 2024 03:57 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ஒன்றியம் சாமநத்தம் ஊராட்சியில் ரூ. 3.16 கோடியில் திட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளது.
சாமநத்தம், பெரியார் நகரில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 26 லட்சத்தில் 2 ரேஷன் கடைகள், பெரியார் நகரில் ரூ. 25 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பெரியார் நகரில் ரூ. 30 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை, மாணிக்கம் தாகூர் எம்.பி., நிதி ரூ. 9 லட்சத்தில் பெரியார் நகரில் நாடக மேடை, ரூ. 6 லட்சத்தில் பஸ் ஸ்டாப் கட்டடம், முதல்வர் நிதி ரூ. 70 லட்சத்தில் பெரியார் நகரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 2 கூடுதல் கட்டடங்கள், முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்தில் ரூ. 1.50 கோடியில் சாமநத்தம் முதல் ஐந்து வீடுவரை தார்ச்சாலை பணிகள் நிறைவுற்றுள்ளது என ஊராட்சி தலைவர் ராஜலட்சுமி, துணைத் தலைவர் தனசேகரபாண்டியன் தெரிவித்தனர். ஒன்றிய கவுன்சிலர் ஜெயக்குமார், ஊராட்சி செயலாளர் கண்ணன் உடனிருந்தனர்.