/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ராமகிருஷ்ண மடம் சார்பில் ரூ.1671 கோடி பணிகள்
/
ராமகிருஷ்ண மடம் சார்பில் ரூ.1671 கோடி பணிகள்
ADDED : டிச 27, 2025 07:00 AM
மதுரை: ராமகிருஷ்ண மிஷனின் 116 வது ஆண்டு பொதுக்கூட்டம் நடந்தது. பொதுச் செயலாளர் சுவாமி சுவீரானந்தர் ராமகிருஷ்ண மிஷனின் 2024--25 நிதியாண்டு அறிக்கையை சமர்ப்பித்தார்.
அவர் கூறியதாவது: இந்தியாவில் உள்ள 244 ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷன்களில் ரூ.1,671 கோடி மதிப்புள்ள பல்வேறு சேவை பணிகளை செய்துள்ளது.
ராமகிருஷ்ண மடம் மதுரை கிளை கடந்த வருடத்தில் ரூ.27 லட்ச ரூபாய்க்கு சேவை பணிகளை செய்துள்ளது இந்த சேவை பணியில் கல்வி, மருத்துவம், பொதுநலம், நிவாரண மற்றும் மறுவாழ்வு, கிராமப்புற,மலைவாழ் மக்கள் நலம், ஆன்மிகப் பிரசாரம் உள்ளிட்ட சேவைகள் அடங்கும்.
இந்தியாவுக்கு வெளியே 24 நாடுகளில் உள்ள 99 மையங்கள் வழி சேவை செய்து வருகிறது' என்றார்.

