ஆய்வுத் திட்டக் கட்டுரை பல்கலையில் பயிலரங்கு மாணவர்கள் பதிவு செய்யலாம்
ஆய்வுத் திட்டக் கட்டுரை பல்கலையில் பயிலரங்கு மாணவர்கள் பதிவு செய்யலாம்
ADDED : ஆக 20, 2026 07:43 PM

மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் ஆய்வுத் திட்டக் கட்டுரைகள் எழுதும் முறைகள் குறித்து தேசிய அளவிலான பயிலரங்கு ஆக., 28, 29 ல் நடக்கிறது. இதில் மாணவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் தமிழியல்துறை தலைவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளதாவது: இப்பல்கலை ரூசா, தமிழ்ப் பண்பாட்டு மரபுச்செல்வங்கள் நடுவம், தமிழியல்துறை ஒருங்கிணைப்பில் இந்த இரண்டு நாள் பயிலரங்கு நடக்கின்றன. இதில் இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு ஆய்வுத் திட்டக் கட்டுரை எழுதும் வழிமுறைகள் குறித்து தமிழியற்புலத்தில் நேரடியாகவும், இணையவழியாகவும் நடக்கிறது. இதில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் tamilkanikani@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் ஆக.,26 க்குள் வருகையை தெரிவிக்க வேண்டும். மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்லுாரி முதல்வர், நிர்வாகத்தின் அனுமதி கடிதம் பெற்றுவர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
