திருநகர்: மதுரை திருநகர் மக்கள் மன்றம் சார்பில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு திருக்குறள் உரையரங்கம், 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிளை நுாலகங்களில் சேதமடைந்த புத்தகங்களை இலவசமாக புதுப்பித்து தரும் சேவை செய்யும் ராமலிங்கத்திற்கு பாராட்டு விழா நடந்தது.
இணைச் செயலாளர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் ராஜேந்திரன் வரவேற்றார். தலைவர் செல்லா, துணைத்தலைவர் பொன் மனோகரன், பொருளாளர் மாணிக்கராஜ் முன்னிலை வகித்தனர். செந்தமிழ்க்கல்லுாரி பேராசிரியர் ஆதிவீர பாண்டியன் திருக்குறள் ஒப்பும் உயர்வும் என்ற தலைப்பில் பேசினார். மன்ற நிர்வாக குழு உறுப்பினர் ராஜேந்திரன் திருக்குறள் விளக்க உரையாற்றினர்.
திருநகர் அனைத்து வியாபாரிகள் நலச்சங்க நிர்வாக குழு உறுப்பினர் செய்யது இப்ராஹிம், திருநகர் ஜெயின்ஸ் குரூப் இயக்குனர் வீரக்கண்ணன், நடைபயிற்சி நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் பாண்டியராஜ் ஆகியோர் ராமலிங்கத்திற்கு நினைவு பரிசு வழங்கினர். உறுப்பினர் புள்ளிகுமார் நன்றி கூறினார்.

