ADDED : ஆக 23, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி முதுகலை கணினி பயன்பாட்டியல், ஐ.ஐ.சி. சார்பில் உலக தொழில் முனைவோர் தினம் கொண்டாடப்பட்டது.
முதல்வர் ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தார். செயலாளர் குமரேஷ் துவக்கி வைத்தார். ஐ.சி.சி. ஒருங்கிணைப்பாளர் கலைவாணி வரவேற்றார். அனைத்து தொழில்கள் வளர்ச்சிக்கான ஆலோசனை, தொழில் முனைவோர் மற்றும் ஏ.ஐ. தொழில்நுட்பம் குறித்து டிஜிட்டல் தொழில்நுட்ப ஆலோசகர் கோகுல்நாத், எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி உதவிப் பேராசிரியர் பார்கவி பயிற்சி அளித்தனர்.
செயற்கை நுண்ணறிவு, வணிக பகுப்பாய்வு டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கம், தொழில் நுட்ப திறன்கள் குறித்து மாணவர்கள் கலந்துரையாடல் நடந்தது. ஐ.ஐ.சி., ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன் நன்றி கூறினார்
