ADDED : பிப் 25, 2024 04:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : மலேசியாவில் பன்னாட்டு சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் மற்றும் போர்கால மன்றமும் இணைந்து உலக சாதனை போட்டி நடத்தினர்.
இதில் மேலுார் ஜாஸ் பள்ளி மாணவர்கள் சுகந்தவனேஸ்வரன், ரித்திகாஸ்ரீ, சந்தோஷ் உள்ளிட்ட மாணவர்கள் ஒற்றை, இரட்டைக் கம்பு சுற்றும் சிலம்ப சண்டை பிரிவில் வெற்றி பெற்று உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் வேதசாம், பயிற்சியாளர் சுரேஷ்குமார் பாராட்டினார்.