தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ உலக வனவிலங்கு தின கொண்டாட்டம்

 உலக வனவிலங்கு தின கொண்டாட்டம்

 உலக வனவிலங்கு தின கொண்டாட்டம்


ADDED : மார் 05, 2026 04:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 04:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வனக்கோட்டம் சார்பில் உலக வன விலங்கு தினம் கொண்டாடப்பட்டது.

ஆரோக்கியம் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல் எனும் கருப்பொருளில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரவீன்குமார் தலைமை வகித்தார். வனவிலங்கு, வாழ்விட பாதுகாப்பிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு வழங்கிய 5 பேருக்கு 'சமூகம் சார்ந்த பாதுகாப்புத் தலைமை' விருதுடன், ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசை கலெக்டர் வழங்கினார்.

மேம்பட்ட வனவிலங்கு பாதுகாப்பு நிறுவனம் சார்பில் பாதுகாப்பு, பல்லுயிர் விழிப்புணர்வு குறித்து பயிற்சி பெற்ற 500 அரசு பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ், வழிகாட்டியாக செயல்பட்ட 25 ஆசிரியர்களுக்கு ரூ. 2 ஆயிரம் மதிப்பூதியம் வழங்கப்பட்டது. சதுப்பு நிலங்களின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம், பல்லுயிர் பாதுகாப்பு சவால்கள், நிலையான மேலாண்மை முறைகள் குறித்து துறை சார்ந்த வல்லுனர்களுடன் கருத்து பரிமாற்றம் நடந்தது.

சுற்றுச்சூழல் சமநிலை பேணுவதில் பாம்புகளின் பங்கு, மனித - வனவிலங்கு மோதல், வங்க நரி, பொன்னிற நரி இனங்களை பாது காத்தல், வண்ணத்துப் பூச்சி இனங்களின் செழுமை, மகரந்த சேர்க்கையில் அவற்றின் பங்கு, சுற்றுச்சூழலின் குறிகாட்டிகளாக அவற்றின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டன.

மாவட்ட வன அலுவலர் ரேவ்டி ராமன் கூறுகையில், வனவிலங்கு, பல்லுயிர் பாதுகாப்பில் கூட்டுப் பொறுப்பு, தொடர் செயல்பாடு அவசியமானது. அடுத்த தலைமுறையினருக்காக இயற்கை பாரம்பரியத்தை பாதுகாப்பதில் சமூகம், கல்வி நிறுவனங்கள், பாதுகாப்பு பங்காளர்களை ஈடுபடுத்துவதில் வனக்கோட்டம் உறுதியுடன் செயல்படும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us