/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி குன்றத்தில் பொங்கல் வைத்து வழிபாடு

ADDED : டிச 27, 2025 06:32 AM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்துாணில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்ற வலியுறுத்தி மலை அடிவாரத்திலுள்ள பழநி ஆண்டவர் கோயில் தெரு, கோட்டை தெரு பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று அப்பகுதி மக்கள் பழநி ஆண்டவர் கோயில் முன் பொங்கல் வைத்தனர். பின் பொங்கல் பானைகளை கோயில் படிக்கட்டுகளில் வைத்து பூஜை, தீபாராதனை செய்து விநியோகித்தனர்.ஏற்கனவே கோரிக்கையை வலியுறுத்தி
இப்பகுதி மக்கள் வீடுகளில் முருகன் கொடி கட்டி, வாசலில் விளக்கு ஏற்றினர். பழநி ஆண்டவர் கோயிலில் விளக்கு ஏற்றி வழிபட்டனர். அறப்போராட்டம் தொடரும் என்றனர்.