/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருக்குறள் போட்டிக்கு எழுத்துத்தேர்வு
/
திருக்குறள் போட்டிக்கு எழுத்துத்தேர்வு
ADDED : ஜன 09, 2026 06:17 AM
மதுரை: தமிழக அரசு ஆண்டுதோறும் குறள் வாரம் கொண்டாட உத்தர விட்டுள்ளது. அதன்படி 2026 ஜனவரியில் மாநிலம் முழுவதும் குறள்வாரம் கொண்டாடப்பட உள்ளது.
இதன் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் ஜன.21 அன்று தமிழ் வளர்ச்சித்துறை குறளாசிரியர் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 15 ஆசிரியர்கள் (அனைத்து வகை பள்ளி, கல்லுாரிகளில் இருந்தும்), 15 அரசு ஊழியர்கள் (அரசு, பொதுத்துறையில் பணியாற்றுவோர்) ஆக மொத்தம் 30 பேர் அதில் பங்கேற்கலாம்.
மதுரை மாவட்டத்தில் அவர்களை தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு ஜன.9 (இன்று) மதியம் மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. இதில் பங்கேற்பவர்கள் ஒருமணி நேரத்திற்கு முன் வரவேண்டும். தேர்வு எழுத விரும்புவோர் அங்கு வந்து பதிவு செய்யலாம் என கலெக்டர் பிரவீன் தெரிவித்துள்ளார்.

