ADDED : ஆக 27, 2025 06:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : முள்ளிப்பள்ளம் ஜெயலட்சுமி, விஜயலட்சுமி, வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜை, விமான கலச பிரதிஷ்டை நடந்தது.
இக்கோயில் புனரமைக்கப்பட்டு (ஆக.28) வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. இதற்கான யாகசாலை பூஜைகள் நேற்று துவங்கின. லட்சுமி நரசிம்ம அய்யங்கார் தலைமையில் முதல்காலயாக பூஜை தொடங்கியது. தொடர்ந்து புண்யாஹ வாசனம், வாஸ்து சாந்தி ஹோமம், அங்குரார்பணம் நடந்தது. விமான கலசம் பிரதிஷ்டை செய்து தீபாராதனை காட்டப்பட்டது. நிர்வாக அலுவலர் இளமதி, தக்கார் சங்கரேஸ்வரி, கோயில் ஊழியர்கள், கிராமத்தினர் செய்தனர்.