ADDED : ஜன 13, 2024 04:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : பொங்கல் பண்டிகையின்போது பானையில் மங்களகரமான மஞ்சள் கொத்து கட்டுவது வழக்கம். மேலுார் அருகே சருகுவலையபட்டி, ஏ.கோயில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது.
விவசாயிகள் கூறியதாவது : பொங்கல் பண்டிகை பயன்பாட்டுக்காக பயிரிடப்படும் மஞ்சள் ஆறு மாதத்திலும், சமைப்பதற்கான மஞ்சள் ஓராண்டிலும் அறுவடை செய்வோம். இப்பகுதியில் விளைவிக்கப்படும் மஞ்சள் கொத்துக்களை தென்னங்கீற்றில் சுற்றி தமிழகத்தின் பல பகுதிகள் மற்றும் ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கிறோம்.
மஞ்சள் செடியில் இருந்து பல வகையான மருந்துகள் தயாரிக்கவும், உணவு, அழகு சாதனங்கள் அனைத்திலும் பயன்படுவதால் விவசாயிகளுக்கு பணமும், பொதுமக்களுக்கு உபயோகப்படுவதால் மனமும் நிறைவாக உள்ளது என்றனர்.