தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நேற்றைய தேர்தல் சோதனை

 நேற்றைய தேர்தல் சோதனை

 நேற்றைய தேர்தல் சோதனை


ADDED : மார் 18, 2026 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 05:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரூ.2 லட்சம்

நாவினிபட்டியில் பறக்கும் படை அதிகாரி சரவணன் தலைமையில் தனியார் பள்ளி உரிமையாளர் சோழிங்கநல்லுார் செந்தில்குமார் காரை சோதனை செய்தனர். ஆவணமின்றி இருந்த ரூ. ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 500 ஐ பறிமுதல் செய்த உதவி தேர்தல் அதிகாரி முத்துப்பாண்டி, வருவாய்த்துறை அதிகாரி முருகானந்தம் மூலம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

ரூ. 1.30 லட்சம்

திருப்பரங்குன்றம் தோப்பூரில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் சாம் டேனியல் தலைமையில் நடந்த சோதனையில் சின்ன உலகாணி விஸ்வநாதன் காரில் ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ரூ. ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 500 ஐ பறிமுதல் செய்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜ குரு ஆலோசனைப்படி பறிமுதல் பணம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

ரூ.4 லட்சம்

பாண்டாங்குடியில் பறக்கும் படை அதிகாரி கிருஷ்ணகுமார், எஸ்.ஐ., சோனை முத்து, போலீசார் கீதா டூவீலரை சோதனையிட்டனர். ஆவணமில்லாத ரூ.4 லட்சத்து 2 ஆயிரத்து 410 ம் குறித்து விசாரித்தனர். சிங்கம்புணரியில் கோழி வியாபாரம் செய்த பணத்தை கொண்டு சென்றது தெரிந்தது. உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முத்துப்பாண்டி மூலம் அதனை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

ரூ.2.14 லட்சம்

பேரையூர் அருகே மங்கல்ரேவு விலக்கு பகுதியில் வணிகவரித்துறை துணை அலுவலர் வெங்கடேஷ் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருமங்கலம் தாலுகா தங்களாச்சேரியைச் சேர்ந்த மக்காச்சோள வியாபாரி வைரமுத்து 35, காரில் வந்தார். காரை நிறுத்தி சோதனை செய்தபோது உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 2. 14 லட்சம் இருந்தது. பணத்தை பறிமுதல் செய்த கண்காணிப்பு குழுவினர் தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

ரூ.2.50 லட்சம்

சாணாம்பட்டியில் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் தினேஷ்குமார் தலைமையில் எஸ்.ஐ.,சரஸ்வதி, ஏட்டு கனகராஜ் சோதனை செய்தனர். பெரியகுளத்தில் இருந்து வாடிப்பட்டிக்கு சித்திரவேலு ஓட்டிச் சென்ற சரக்கு வேனில் ஆவணமின்றி இருந்த ரூ.ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 200 ஐ பறிமுதல் செய்தனர். திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு பெரோஸ்கான் ஓட்டிச்சென்ற ஆம்னி வேனில் ரூ.67 ஆயிரம் பறிமுதல் செய்தனர். தேர்தல் அலுவலர் சண்முகவடிவேல், உதவி தேர்தல் அலுவலர் ராமச்சந்திரன், தேர்தல் துணைத் தாசில்தார் கருப்பையா மூலம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

பிளாஸ்டிக் வாளிகள்

திருமங்கலம் தொகுதி வில்லுாரில் வாக்காளருக்கு வழங்க பிளாஸ்டிக் வாளிகளை அ.தி.மு.க., வினர் வைத்திருப்பதாக கலெக்டர் அலுவலக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. அப்பகுதி நிலை கண்காணிப்பு குழுவினர் உஷார்படுத்தப்பட்டனர். துணைத் தாசில்தார் முத்துராமன் தலைமையில் கிராமத்தில் நடத்திய சோதனையில், அ.தி.மு.க., முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் விஜய முருகன் வீட்டில் வைத்திருந்த அ.தி.மு.க., ஸ்டிக்கர் ஒட்டியிருந்த 38 பிளாஸ்டிக் வாளிகளை பறிமுதல் செய்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர் சிவஜோதி முன்னிலையில் திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us