ADDED : மார் 19, 2026 04:32 AM
ரூ.2.88 லட்சம் மதுரை வடக்கு தொகுதியில் மேலமடை பகுதியில் பறக்கும் படையினர் அணி1 சோதனை நடத்தியது. இதில் ரூ.1.29 லட்சம், இரண்டாவது அணியின் சோதனையில் ரூ.1.59 லட்சம் மற்றும் ஒரு அமெரிக்க டாலர் (ரூ.93), ஐக்கிய அரபு எமிரேட்ஸின் 10 திர்காம் (ரூ.251) பறிமுதல் செய்யப்பட்டது.
ரூ.57, 500 உசிலம்பட்டி தொகுதியில் சதீஷ்பிரபு, எஸ்.ஐ., செல்வகுமாரி தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழு செக்கா னுாரணி புள்ளநேரியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டது. வாடிப்பட்டி தாலுகா தனிச்சியம் அசோக் வந்த காரில் ஆவணங்கள் இன்றி ரூ. 57 ஆயிரத்து 700 இருந்ததை கைப்பற்றின ர். உசிலம்பட்டி தேர்தல் அலுவலர் உட்கர்ஷ்குமார் மூலம் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
---ரூ. 90 ஆயிரம் மேலுார் கிடாரிப்பட்டி பகுதியில் பறக்கும் படை அதிகாரி கிறிஸ்டோபர் தலைமையில் நடந்த சோதனையில், டூவீலரில் வந்த அழகாபுரி குமார் ஆவணம் இன்றி ரூ. 90 ஆயிரம் கொண்டு சென்றதை பறிமுதல் செய்தனர். உதவி தேர்தல் அலுவலர் முத்துப்பாண்டி மூலம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
அ.தி.மு.க., நோட்டீஸ்கள் திருமங்கலம் கப்பலுார் டோல்கேட் பகுதியில் கள்ளிக்குடி வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் பிச்சை தலைமையிலான பறக்கும்படை வாகன சோதனையில் ஈடுபட்டது. அவ்வழியாக வந்த அ.தி.மு.க., கலை பண்பாட்டு பிரிவு செயலாளர் சிவசக்தி, இணைச் செயலாளர் வெங்கடேஷ் காரை சோதனையிட்டனர். அதில் போட்டோக்கள், சின்னம் அச்சிட்ட 1464 நோட்டீஸ்கள் இருந்ததை பறிமுதல் செய்தனர். திருமங்கலம் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவஜோதி முன்னிலையில் ஒப்படைத்தனர். வழக்குப் பதிந்து விசாரிக்க போலீசாருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சிவஜோதி உத்தரவிட்டார்.
ரூ.1.14 லட்சம் மேலுார் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சதீஷ்குமார் வாகன சோதனையில் டூவீலரில் வந்த கீழவளவு ராஜகுமாரிடம் ஆய்வு செய்த போது ஆவணம் இன்றி இருந்த ரூ. 1.14 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து உதவி தேர்தல் அலுவலர் முத்துப்பாண்டி மூலம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
