தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நேற்றைய தேர்தல் 'சோதனை'

 நேற்றைய தேர்தல் 'சோதனை'

 நேற்றைய தேர்தல் 'சோதனை'


ADDED : மார் 20, 2026 05:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 20, 2026 05:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ரூ.6.8 லட்சம் நகைகள் மதுரை மத்திய தொகுதியில் ஆவணிமூலவீதி நகைக்கடை பஜாரில் டூவீலரில் சென்ற ஒருவரை கார்த்திகேயன் தலைமையிலான பறக்கும்படை சோதனை செய்தது. அவரிடம் ஆவணமின்றி இருந்த ரூ.6.8 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வன் மூலம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

24 மதுபாட்டில்கள் மதுரை கிழக்கு தொகுதியில் ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள 24 மதுபாட்டில்கள், மதுரை தெற்கு தொகுதியில் ரூ.75 ஆயிரம் ரொக்கம், மேலுார் தொகுதியில் ரூ.2.42 லட்சம், திருப்பரங்குன்றத்தில் ரூ.90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

ரூ.1.51 லட்சம் திருவாதவூர் பகுதியில் பறக்கும் படை அதிகாரி விஜயகுமார் வாகன சோதனையின் போது ஆவின் பால் ஏற்றி வந்த கொடிக்குளம் டிரைவர் நாகசுந்தரபாண்டியன் வந்த வேனில் உரிய ஆவணம் இன்றி ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 700 கொண்டு வரவே பறிமுதல் செய்து உதவி தேர்தல் அலுவலர் முத்துப்பாண்டி, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சுந்தரபாண்டி மூலம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

- ரூ.3.66 லட்சம்

சாணாம்பட்டியில் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் தினேஷ்குமார் தலைமையில் எஸ்.ஐ.,சரஸ்வதி, ஏட்டு கனகராஜ் வாகன சோதனை செய்தனர். வாடிப்பட்டியில் இருந்து பெரியகுளத்துக்கு டூவீலரில் சென்ற கோபாலகிருஷ்ணன் ஆவணமின்றி வைத்திருந்த ரூ.ஒரு லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

சோழவந்தான் முள்ளிப்பள்ளத்தில் நிலையான கண்காணிப்புக்குழு அலுவலர் முத்துராமன், எஸ்.ஐ., ஆனந்தன், ஏட்டு மீனா நடத்திய சோதனையில் ஜீப்பில் வந்த வடகாடுபட்டி வீரண்ணனிடம் ரூ.2.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பறக்கும் படை அலுவலர் நாகராஜ் தலைமையில் எஸ்.ஐ.,பாபுகாந்தி, ஏட்டு காயத்ரி நாராயணபுரத்தில் நடத்திய சோதனையில், டூவீலரில் வந்த விளாம்பட்டி பால்ராஜிடம் ரூ.51 ஆயிரத்து 900 ஐ பறிமுதல் செய்தனர். வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் சண்முகவடிவேல், உதவி தேர்தல் அலுவலர் ராமச்சந்திரன், துணைத் தாசில்தார் கருப்பையா மூலம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

ரூ.54,640 மேலுார் தொகுதி கம்பூரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி மாரிமுத்து வாகன சோதனை நடத்தினார். டூ வீலரில் வந்த ராஜேஸ்வரி என்பவர் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.54 ஆயிரத்து 640 ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்து உதவி தேர்தல் அதிகாரி முத்துப்பாண்டி, துணைத் தாசில்தார் சுந்தரபாண்டி மூலம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

ரூ.55 ஆயிரம் இ. மலம்பட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி நவநீதகிருஷ்ணன் வாகன சோதனையின் போது டூவீலரில் வந்த மதுரை கார்த்திக் உரிய ஆவணம் இன்றி ரூ. 55 ஆயிரம் கொண்டு சென்றதால், பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துப்பாண்டி மூலம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

ரூ. 90 ஆயிரம் பறிமுதல் பெருங்குடி மண்டேலா நகரில் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் ராஜசேகரன் தலைமையில் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கேரளாவில் இருந்து காசிநாதன் வந்த காரை குழுவினர் சோதனை இட்டனர். ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ. 90 ஆயிரத்து 200ஐ பறிமுதல் செய்து, தேர்தல் அலுவலர் ராஜகுருவின் ஆலோசனையின்படி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us