ADDED : மார் 23, 2026 06:39 AM
ரூ. 79 ஆயிரம்
அவனியாபுரம்: மண்டேலா நகரில் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் குழு வாகன சோதனையில் ஈடுபட்டது. அவ்வழியாக வந்த தினகரன் என்பவரின் காரை சோதனையிட்டனர். ஆவணங்கள் இன்றி இருந்த ரூ. 79 ஆயிரத்தை பறிமுதல் செய்து, தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகுருவின் ஆலோசனைப்படி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
ரூ.1.30 லட்சம்
மதுரை: சிட்டம்பட்டி டோல் கேட் அருகே நிலையான கண்காணிப்புக்குழுவினர் நடத்திய சோதனையில் ஒரு காரில் வந்தவர்கள் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.30 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
வாடிப்பட்டி: பாண்டியராஜபுரத்தில் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் தினேஷ்குமார் தலைமையில் எஸ்.ஐ.,சரஸ்வதி, ஏட்டு கனகராஜ் வாகன சோதனை செய்தனர். திருப்பத்துாரில் காரில் சென்ற மணிகண்டன் ஆவணமின்றி வைத்திருந்த ரூ.1.04 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
ரூ.70 ஆயிரம்
பேரையூர்: மகாராஷ்டிரா மாநிலம், புனே, சிக்காப்பூர் சதீசன் 53. திருவனந்தபுரத்தில் உள்ள உறவினர் வீட்டு விழாவுக்கு செல்ல காரில் மதுரை மாவட்டம் டி குன்னத்துார் அருகே வந்தார். அவரது காரை நிறுத்திய பறக்கும் படை அலுவலர் கவிதா தலைமையிலான குழு சோதனை செய்தது. அதில் கணக்கில் வராத ரூ.70 ஆயிரத்தை பறிமுதல் செய்து திருமங்கலம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
ரூ.1.94 லட்சம்
பேரையூர்: சின்னகட்டளை கற்பகம் 40. இவர் 2 நாட்களுக்கு முன்பு நகை எடுப்பதற்காக வங்கியில் பணம் எடுத்தார். நேற்று நகை எடுக்க காரில் மங்கல்ரேவு அருகே சென்ற போது பறக்கும் படை அதிகாரி அறிவழகன் தலைமையிலான குழு சோதனை செய்தது. இதில் அவர் வைத்திருந்த ரூ.1.94 லட்சத்தை பறிமுதல் செய்து உசிலம்பட்டி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
