தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/தேர்தல் சோதனை

தேர்தல் சோதனை

தேர்தல் சோதனை


ADDED : மார் 25, 2026 11:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2026 11:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

* ரூ. ஒரு லட்சம் உசிலம்பட்டி - மதுரை ரோட்டில் மீனாட்சிபட்டி பகுதியில் செல்வமீனாட்சி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியே ஆட்டோவில் வந்த சமயநல்லுார் காசிவிஸ்வநாதனிடம் ரூ. ஒருலட்சம் இருந்தது.ஆவணங்கள் இல்லாததால் அதனை பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

---

* ரூ.85 ஆயிரம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் கணவாய்பட்டி அருகில் அலெக்ஸ்பாண்டியன் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக காரில் வந்த தாடையம்பட்டி மாய கிருஷ்ணன் ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ. 85 ஆயிரத்தை பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

* மேலூர், மார்ச் 26-

மேலூர் ஒன்றிய அலுவலகம் முன்பு தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஜான்சன் கமலதாஸ் வந்த காரை சோதனையிட்ட போது தூத்துக்குடி கோமதி சங்கரிடம் உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த ரூ.82 ஆயிரத்தை பறிமுதல் செய்து உதவி தேர்தல் அதிகாரி முத்துப்பாண்டி, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சுந்தரபாண்டி மூலம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

---

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us