ADDED : ஆக 29, 2025 03:55 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மகாத்மா காந்தி யோகா நிறுவனம் சார்பில் செப்.1 முதல் ஒருமாத கால யோகா வகுப்பு நடக்கிறது. தெப்பக்குளம் கீதா நடன கோபால நாயகி மந்திரில் தினமும் காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை நடக்கும் இவ்வகுப்பில் எல்லா வயதினரும் எளிதாக செய்யக்கூடிய ஆசனங்கள், பிராணாயாமம், தியானம், ஓய்வு உத்திகள் பயிற்றுவிக்கப்படும்.
பெண்களுக்கான சிறப்பு வகுப்பு தெப்பக்குளம் டாக்டர் கோகுல்நாத் பாலாஜி நர்சிங் ஹோமில் தினமும் காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை நடக்கிறது.
உயர் ரத்த அழுத்தம், நீரழிவு நோய், சுவாசப் பிரச்னைகள், மூட்டு, முதுகு, கழுத்து வலி, கருப்பை, ஹார்மோன் கோளாறு, உடல் பருமன், மன அழுத்தத்தில் இருந்து விடுபட இவ்வகுப்பு உதவும். மேலும் விபரங்களுக்கு இயக்குனர் கே.பி. கங்காதரனை 88834 21666ல் தொடர்பு கொள்ளலாம்.
