/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருந்திய நெல் சாகுபடி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
/
திருந்திய நெல் சாகுபடி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
திருந்திய நெல் சாகுபடி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
திருந்திய நெல் சாகுபடி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜன 19, 2025 05:09 AM
மதுரை: திருந்திய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் தமிழக அரசின் நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மதுரை வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் குறைந்தது 2 ஏக்கரில் தொடர்ந்து மூன்றாண்டுகள் திருந்திய நெல் சாகுபடி செய்யவேண்டும். நில உரிமையாளர்கள், குத்தகைதாரர்களும் விண்ணப்பிக்கலாம். அரசால் அங்கீகரிக்கப்பட்ட நெல் ரகங்களை மட்டுமே பயிரிட வேண்டும். விவசாயிகளின் வயலில் 50 சென்ட் அளவில் பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதற்கான பதிவு கட்டணம் ரூ.150ஐ மார்ச் 31 க்குள் செலுத்த வேண்டும். ஏப். 15 க்குள் அறுவடை செய்ய வேண்டும். திருந்திய நெல் சாகுபடி தொடர்பான ஆவணங்கள் பராமரிக்கப்பட வேண்டும்.
ஏற்கனவே விருது பெற்ற விவசாயி (மூன்றாண்டுகளுக்கு) விண்ணப்பிக்கக்கூடாது. படிவத்தை பூர்த்தி செய்து அந்தந்த வட்டார உதவி இயக்குநரிடம் சமர்ப்பிக்க வேண்டும். விருதுக்கு தேர்வு பெறும் விவசாயிக்கு குடியரசு தினத்தன்று ரூ.5 லட்சத்திற்கான ரொக்கம், வெள்ளிப்பதக்கம் முதல்வரால் வழங்கப்படும் என்றார்.

