/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆடாதோடா, நொச்சி கன்று சாகுபடி செய்யலாம்
/
ஆடாதோடா, நொச்சி கன்று சாகுபடி செய்யலாம்
ADDED : டிச 18, 2024 05:51 AM
மதுரை : முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் ஆடாதோடா, நொச்சி கன்றுகளை விவசாயிகள் நடவு செய்யலாம்.
வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் ஒன்றரை லட்சம் ஆடாதோடா, நொச்சி கன்றுகள் விவசாயிகளுக்கு முழு மானியத்தில் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது வாடிப்பட்டி, கள்ளிக்குடி, திருப்பரங்குன்றத்தில் தலா 11ஆயிரம் கன்றுகள் திருமங்கலத்தில் 9000 கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலைத்துறை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒவ்வொரு விவசாயிக்கு 25 நொச்சி, 25 ஆடாதோடா கன்றுகள் முழு மானியத்தில் வழங்கப்படும். இவற்றை வயல்வெளி, வரப்போரத்தில் நடவு செய்யலாம். இதன் இலைகளை அரைத்து தாவர பூச்சிவிரட்டியாக பயன்படுத்தலாம். கன்றுகள் வாங்க விரும்புபவர்கள் அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநரை அணுகலாம் என்றார்.