sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 தோண்டுனீங்களே... மூடுனீங்களா உங்களைத்தானே அதிகாரிகளே...

/

 தோண்டுனீங்களே... மூடுனீங்களா உங்களைத்தானே அதிகாரிகளே...

 தோண்டுனீங்களே... மூடுனீங்களா உங்களைத்தானே அதிகாரிகளே...

 தோண்டுனீங்களே... மூடுனீங்களா உங்களைத்தானே அதிகாரிகளே...


ADDED : பிப் 04, 2026 06:43 AM

Google News

ADDED : பிப் 04, 2026 06:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்: சோழவந்தான் மன்னாடிமங்கலத்தில் தோண்டிய ரோட்டை சீரமைக்காததால்அப்பகுதியினர் தவியாய் தவிக்கின்றனர்.

சமூகஆர்வலர் நவநீதகிருஷ்ணன் கூறியதாவது: இங்குள்ள அக்ரஹாரத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் தனியார் பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளன. ஓராண்டுக்கு முன்பு அணைப்பட்டியில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக குடிநீர் வடிகால் வாரியத்தால் ரோட்டை தோண்டி குழாய்கள் பதிக்கப்பட்டன. பணிகள் முடிந்தும் முழுமையாகசீரமைக்கப்படாமல் பள்ளம் மட்டுமேமூடப்பட்டது.

இதனால்ரோடு முழுவதும் கல்லும், மண்ணும், குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. பள்ளி, ஆரம்பசுகாதார நிலையத்திற்கு தினமும் பலர் செல்கின்றனர். அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் இவ்வழியை பயன்படுத்துகிறது. மேடு பள்ளமாக இருப்பதால் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது. குழந்தைகள், பெண்கள், முதியோர் விழுந்து காயமடைகின்றனர்.

மழைக்காலத்தில் சேறும் சகதியுமாக மாறி நடக்க கூட லாயக்கற்றதாகி விடுகிறது. அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் பலனில்லை. பள்ளம் தோண்டியதையே மறந்து விட்டது போல நடக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us