தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இளம் தலைவர்கள் கருத்தரங்கு துவக்கம்

 இளம் தலைவர்கள் கருத்தரங்கு துவக்கம்

 இளம் தலைவர்கள் கருத்தரங்கு துவக்கம்


ADDED : டிச 20, 2025 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 20, 2025 05:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை சேர்மத்தாய் வாசன் கல்லுாரியில் மத்திய அரசின் இளைஞர் நலத்துறை சார்பில் 'எதிர்கால இளம் தலைவர்கள்' கருத்தரங்கை கலெக்டர் பிரவீன்குமார் துவக்கி வைத்தார். மை பாரத் மாநில இயக்குநர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

கலெக்டர் பேசியதாவது: நம் நாட்டின் மக்கள் தொகை கவலையளிக்கிறது. ஆனாலும் 14 - 45 வயதிற்குட்பட்டோர் எண்ணிக்கை பன்மடங்கு உள்ளது. இதுவேநமக்கு மிகப்பெரிய வஜ்ராயுதமாக மாறி உள்ளது. இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது இளைஞர்களின் கையில் தான் உள்ளது. பயிற்சி, திறன் கொடுக்கும்போது தொழில் துறையில் சாதிக்க முடியும்.

இளைஞர்களுக்கான வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. தேவையான திறனை வளர்த்துக்கொள்வதன் மூலம் எதையும் சாதிக்கலாம். கலெக்டர் எந்த திசையில் நிர்வாகத்தை கொண்டு செல்கிறாரோ, அதே திசையில் தான் மாவட்டம்இயங்கும். தலைமை பண்பு என்பது நாட்டின் எதிர்காலத்திற்கு முக்கியமான விஷயம் என்றார்.

போலீஸ் உதவி கமிஷனர் இலக்கியா, கல்லுாரி செயலாளர் பாலகுரு, முதல்வர் கவிதா, மதுரை தெற்கு தாசில்தார் ரவிச்சந்திரன் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us