'ஜீரோ' ஓட்டுப்பதிவு சாவடி தேர்தல் பார்வையாளர் ஆய்வு
'ஜீரோ' ஓட்டுப்பதிவு சாவடி தேர்தல் பார்வையாளர் ஆய்வு
ADDED : மார் 21, 2026 07:15 AM
திருமங்கலம்: திருமங்கலம் தொகுதி கள்ளிக்குடி தாலுகா சென்னம்பட்டி அருகே கோழிக் கழிவில் இருந்து உரம் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்நிறுவனத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதியினர் கடும் நோயால் பாதிக்கும் அபாயம் உருவானது. அந்த நிறுவனத்தை அகற்றக்கோரி ஓடைப்பட்டி, பேய்குளம், சென்னம்பட்டி, ஆவல்சூரன்பட்டி கிராமத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். லோக்சபா தேர்தலில் யாரும் ஓட்டளிக்கவில்லை. இதனால் அந்த ஓட்டுச் சாவடிகளில் ஒரு ஓட்டு கூட பதிவாகவில்லை.
சட்டசபை தேர்தலுக்காகதிருமங்கலம் வந்த பொது தேர்தல் பார்வையாளர் மிங்மா டெம்பா ஷெர்பா அந்த ஓட்டுச் சாவடிகளை ஆய்வு செய்தார். பதற்றமான ஓட்டுச் சாவடிகள் சிலவற்றையும் பார்வையிட்டார். தேர்தல் நடத்தும் அலுவலர் சிவஜோதி, உதவி அலுவலர்கள் மனேஷ்குமார், சிவக்குமார், தேர்தல் அதிகாரிகள் உடனிருந்தனர்.
