/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
எஸ்.ஐ., மனைவியிடம் செயின் பறிப்பு ராணுவ வீரர் உள்ளிட்ட 2 பேர் கைது
/
எஸ்.ஐ., மனைவியிடம் செயின் பறிப்பு ராணுவ வீரர் உள்ளிட்ட 2 பேர் கைது
எஸ்.ஐ., மனைவியிடம் செயின் பறிப்பு ராணுவ வீரர் உள்ளிட்ட 2 பேர் கைது
எஸ்.ஐ., மனைவியிடம் செயின் பறிப்பு ராணுவ வீரர் உள்ளிட்ட 2 பேர் கைது
ADDED : ஜூலை 10, 2024 08:42 PM
மயிலாடுதுறை:மயிலாடுதுறை அருகே சப் இன்ஸ்பெக்டர் மனைவியிடம் செயினை பறித்து சென்ற ராணுவ வீரர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்த திருவாவடுதுறை மேலக்கடை பகுதியை சேர்ந்தவர் கண்ணன். பெரம்பூர் போலீஸ் ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டர். இவரது மனைவி ஜானகி கடந்த 2ம் தேதி வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது டூவீலரில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 வாலிபர்கள் ஜானகி அணிந்திருந்த தங்க செயின்களை பறித்து சென்றனர்.
இதுகுறித்து குத்தாலம் போலீசார் வழக்கு பதிந்து சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் கிடைத்த தகவலின் பேரில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபத்தை சேர்ந்த ராணுவ வீரர் வசந்த், நீடாமங்கலம் சாலையில் வசித்து வரும் சிவா ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 4 சவரன் தங்க செயின், 2 மொபைல் போன்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் திரிபுராவில் ராணுவத்தில் பணிபுரியும் வசந்த் விடுமுறையில் ஊருக்கு வரும் போது சிவாவுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு, அதில் வரும் பணத்தில் மது மற்றும் சூதாட்டம் என சுற்றித் திரிந்தது தெரிய வந்தது. மேலும், இவர் சிவாவுடன் சேர்ந்த 3 வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதும், தற்போது 4வதாக ஈடுபட்ட செயின் பறிப்பு வழக்கில் போலீசில் சிக்கியுள்ளது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து குத்தாலம் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ராணுவ வீரர் திருட்டு வழக்கில் கைது செய்துள்ளதை, ராணுவ தலைமைக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.