ADDED : செப் 04, 2024 06:57 AM
மயிலம் : முன்விரோதம் காரணமாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து 6 பேரை கைது செய்தனர்.
மயிலம் அடுத்த எரளிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் தணிகாசலம் மனைவி குமாரி,52; இதே கிராமத்தைச் சேர்ந்தவர் தீனதயாளன் மனைவி மதுமதி,27; இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது.
கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி இரு தரப்பைச் சேர்ந்தவர்களிடையே தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து மயிலம் போலீசில் இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில், இரு தரப்பையும் சேர்ந்த 14 பேர் மீது வழக்குப் பதிந்து, முத்துக்குமார் மகன் தீனதயாளன், 25; சேகர் மகன் கார்த்தி, 24; கருணாநிதி மகன் அருள், 26; தணிகாசலம் மகன் புருஷோத்தமன், 28; அன்பழகன் மகன்கள் அஜித், 28; மற்றும் ராஜ்குமார், 27; ஆகிய 6 பேரை நேற்று இரவு கைது செய்தனர்.