தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/மயிலாடுதுறை/ மாற்றுத்திறனாளி கொலை ஆட்டோ டிரைவர் கைது

மாற்றுத்திறனாளி கொலை ஆட்டோ டிரைவர் கைது

மாற்றுத்திறனாளி கொலை ஆட்டோ டிரைவர் கைது


ADDED : ஜூலை 05, 2024 02:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2024 02:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மயிலாடுதுறை:மயிலாடுதுறை அருகே மாற்றுத்திறனாளி வாலிபரை வெட்டிக் கொலை செய்த வழக்கில், ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தி அருகே உள்ள நடராஜபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் ராஜேஷ்.26; மாற்றுத்திறனாளி. வி.சி.கட்சியை சேர்ந்த இவர் நேற்று முன்தினம் இரவு மயிலாடுதுறை பிரதான சாலையில் டூ-வீலரில் சென்றபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

இதில் பலத்த காயமடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்து வந்த மணல்மேடு போலீசார் ராஜேஷின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மயிலாடுதுறை எஸ்.பி., மீனா சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணையை துரிதப்படுத்தினார்.

ராஜேஷ் கொலை செய்யப்பட்டதை அறிந்த அவரது பெற்றோர், உறவினர் மற்றும் வி.சி.கட்சியினர் திரண்டு வந்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி நடராஜபுரம், புத்துார், மயிலாடுதுறை பகுதியில் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜேஷ் கொலை வழக்கு தொடர்பாக நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரஞ்சித், 30, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முன் விரோதத்தால் இக்கொலை நடந்தது தெரிய வந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us