/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
15 வயது சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது
/
15 வயது சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது
ADDED : செப் 06, 2024 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலாடுதுறை:கடலுார் மாவட்டம், நெய்வேலி அடுத்த கீழ்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் சேனாதிபதி, 20. இவருக்கு திருமணமாகி பெண் குழந்தை உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த, 15 வயது சிறுமியுடன் பழகினார்.
சிறுமியின் பெற்றோர், மயிலாடுதுறையில் உள்ள தங்கள் உறவினர் வீட்டில் சிறுமியை விட்டனர். கடந்த 29ம் தேதி சிறுமி மாயமானார்.
புகாரில், மயிலாடுதுறை போலீசார் விசாரித்தில், சிறுமியை சேனாதிபதி கடத்திச் சென்று, நெய்வேலியில் வைத்திருப்பது தெரிய வந்தது. போலீசார், சேனாதிபதியை நேற்று முன்தினம் போக்சோவில் கைது செய்தனர். சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.