/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
பட்டாசு ஆலை விபத்தில் மேலும் ஒருவர் பலி
/
பட்டாசு ஆலை விபத்தில் மேலும் ஒருவர் பலி
ADDED : ஆக 30, 2024 03:17 AM
மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம், திருவாலங்காடு கிராமத்தில் பாண்டியன் என்பவரின் பட்டாசு தயாரிப்பு கூடத்தில், கடந்த 24ம் தேதி வெடி விபத்து ஏற்பட்டது.
அதில், அங்கு வேலை செய்த திருவாவடுதுறை கர்ணன், 25, சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த திருவாலங்காடு லட்சுமணன், 45, கலியபெருமாள், 52, திருவாவடுதுறை குமார், 37, ஆகியோர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அன்றிரவு லட்சுமணன் இறந்தார்.
மற்ற இருவரும் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர். அங்கு, குமார் நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் பட்டாசுஆலை வெடி விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

