/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
பெட்ரோல் குண்டு வீச்சு எஸ்.எஸ்.ஐ., படுகாயம்
/
பெட்ரோல் குண்டு வீச்சு எஸ்.எஸ்.ஐ., படுகாயம்
ADDED : ஆக 02, 2024 01:48 AM
மயிலாடுதுறை:ஒரு தலை காதல் விவகாரத்தில் பெட்ரோல் குண்டு வீசியதில் எஸ்.எஸ்.ஐ., படுகாயமடைந்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன்,59; சிறப்பு சப் இன்ஸ்பெக்டர். இவரது மூத்த மகளை அதே பகுதியைச் சேர்ந்த கலைவேந்தன்,27; கடந்த 8 ஆண்டாக ஒருதலையாக காதலித்து வந்தார். அதற்கு, பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த கலைவேந்தன் நேற்று இரவு எஸ்.எஸ்.ஐ., கணேசன் வீட்டிற்கு சென்று ரகளை செய்து செய்து, தான் கொண்டு சென்ற பெட்ரோல் குண்டை வீசினார். அதில், படுகாயமடைந்த எஸ்.எஸ்.ஐ., கணேசனை அருகில் இருந்தரவ்கள் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும், கலைவேந்தனை பிடித்து திருவெண்காடு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.