/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
அரசு பஸ் சக்கரம் கழன்று ஓடியதால் கடும் அதிர்ச்சி
/
அரசு பஸ் சக்கரம் கழன்று ஓடியதால் கடும் அதிர்ச்சி
ADDED : மே 16, 2024 02:35 AM

மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் இருந்து நேற்று காலை வடரங்கம் கிராமத்திற்கு அரசு டவுன் பஸ் புறப்பட்டது. பஸ்சை, பாபநாசத்தைச் சேர்ந்த அன்பழகன், 44, என்பவர் ஓட்டினார். பஸ் பனங்காட்டங்குடியில் பயணியரை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட சற்று நேரத்தில், பஸ்சின் முன்பக்க இடதுபுற சக்கரம் கழன்று தனியாக ஓடியது. அதைக் கண்ட பயணியரும், சாலையில் சென்ற மக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
நிலைமையை உணர்ந்த டிரைவர் அன்பழகன், சாதுர்யமாக செயல்பட்டு, பஸ்சை சாலை ஓரமாக நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது; பயணியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சமீபத்தில் திருச்சியில் டவுன் பஸ் ஒன்றில் இருக்கையுடன் சேர்ந்து கண்டக்டர் வெளியே துாக்கி வீசப்பட்டதை தொடர்ந்து, தமிழகம் முழுதும் அரசு பஸ்களின் உறுதித் தன்மை குறித்து சில தினங்களுக்கு முன் ஆய்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.