/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
ஹோட்டலில் ஓசி சாப்பாடு கேட்ட சிறப்பு எஸ்.ஐ. ஆயுதப் படைக்கு இடமாற்றம்
/
ஹோட்டலில் ஓசி சாப்பாடு கேட்ட சிறப்பு எஸ்.ஐ. ஆயுதப் படைக்கு இடமாற்றம்
ஹோட்டலில் ஓசி சாப்பாடு கேட்ட சிறப்பு எஸ்.ஐ. ஆயுதப் படைக்கு இடமாற்றம்
ஹோட்டலில் ஓசி சாப்பாடு கேட்ட சிறப்பு எஸ்.ஐ. ஆயுதப் படைக்கு இடமாற்றம்
ADDED : செப் 01, 2024 10:19 PM

மயிலாடுதுறை:சீர்காழியில் குடிபோதையில் ஹோட்டல் ஒன்றில் ஓசி சாப்பாட்டு கேட்ட சிறப்பு எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி போக்குவரத்து பிரிவில் சிறப்பு எஸ்.ஐயாக பாஸ்கர் என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த ஒரு வருடமாக இந்த பிரிவில் பணியாற்றி வரும் பாஸ்கர் பணி நேரத்தில் மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்ததுடன், போதையில் ஹோட்டல்களில் ஓசி சாப்பாடு கேட்டு பெறுவதையும் வாடிக்கையாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புறவழிச் சாலையில் உள்ள பிரபல ஹோட்டலுக்கு காலை வேளையில் சென்ற சிறப்பு எஸ்ஐ பாஸ்கர், சீர்காழி டிஎஸ்பி ராஜ்குமார் பெயரைச் சொல்லி ஓசியில் டிபன் கேட்டுள்ளார். டி.எஸ்.பிக்கு என்ற உடன் கடை ஊழியர்களும் அவர் கேட்ட உயர்தர காலை உணவு வகைகளை தாராளமாக கொடுத்து அனுப்பியுள்ளனர். தொடர்ந்து அன்று இரவும் சிறப்பு எஸ்ஐ பாஸ்கர் மது போதையில் அதே கடைக்கு சென்று டிஎஸ்பிக்கு என ஓசியில் இரவு டிபன் வகைகளை பார்சல் செய்து கொடுக்க வேண்டுமென கேட்டுள்ளார்.
சந்தேகம் அடைந்த ஹோட்டல் நிர்வாகத்தினால் அளித்த புகார் குறித்து டிராபிக் சார்ஜன்ட் வேல்முருகன் மற்றும் டிஎஸ்பி. ராஜ்குமார் ஆகியோர் எஸ்பிக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஹோட்டலில் ஓசி சாப்பாடு கேட்ட சிறப்பு எஸ்.ஐ. பாஸ்கரை மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.