/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
கத்திக்குத்து வாலிபருக்கு கையில் எலும்பு முறிவு
/
கத்திக்குத்து வாலிபருக்கு கையில் எலும்பு முறிவு
ADDED : மார் 07, 2025 01:05 PM

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்., அதிகாரி சேது மாதவன், அவரது மனைவி ஓய்வு பெற்ற ஆசிரியை நிர்மலா தேவி ஆகியோரை சரமாரியாக கத்தியால் குத்திய வாலிபர் பிரேம், 25, தப்பியோடிய போது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
மயிலாடுதுறையை அடுத்த மதுரா நகர் டெலிகாம் நகர் 2வது கிராஸ் பகுதியில் மாதவன், 62, என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி நிர்மலா ,60, ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர். இவர்களுக்கும் எதிர் வீட்டில் வசிக்கும் பிரேம் (24) என்ற பொறியியல் பட்டதாரி வாலிபர் குடும்பத்திற்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
நேற்று காலை வீட்டு வாசலில் கோலம் போட்ட நிர்மலாவை சிறிய கத்தியைக் கொண்டு பிரேம் 15க்கு மேற்பட்ட இடங்களில் குத்தினான். தடுக்க வந்த சேது மாதவனையும் பிரேம் கத்தியால் குத்தினான். படுகாயம் அடைந்த சேது மாதவன் மற்றும் அவரது மனைவி நிர்மலா இருவரும் தஞ்சை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்து மயிலாடுதுறை போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிந்து பிரேமை கைது செய்தனர். இவர் இன்று தப்பியோடிய போது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்து மாவு கட்டு போட்ட பின்னர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.