/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
சிறப்பு எஸ்.ஐ., மீது பெட்ரோல் குண்டு வீசியவர் குண்டர் சட்டத்தில் கைது
/
சிறப்பு எஸ்.ஐ., மீது பெட்ரோல் குண்டு வீசியவர் குண்டர் சட்டத்தில் கைது
சிறப்பு எஸ்.ஐ., மீது பெட்ரோல் குண்டு வீசியவர் குண்டர் சட்டத்தில் கைது
சிறப்பு எஸ்.ஐ., மீது பெட்ரோல் குண்டு வீசியவர் குண்டர் சட்டத்தில் கைது
ADDED : செப் 01, 2024 03:56 AM
மயிலாடுதுறை : சீர்காழி அருகே சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபரை கலெக்டர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருவெண்காடு மாரியம்மன் கோவில் திறப்பை சேர்ந்தவர் கணேசன்,59. திருவெண்காடு போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மூத்த மகளை அதே பகுதியைச் சேர்ந்த கலைவேந்தன்,27, என்பவர் ஒருதலையாக காதலித்துள்ளார்.
இதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி இரவு கலைவேந்தன் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கணேசன் வீட்டிற்கு சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
அதனை கணேசன் கண்டித்ததால் மேலும் ஆத்திரமடைந்த கலைவேந்தன், தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை வீசியதில் கணேசன் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து திருவெண்காடு போலீசார் வழக்கு பதிந்து கலைவேந்தனை கைது செய்து பொறையாறு சப் ஜெயிலில் அடைத்தனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி., ஸ்டாலின் பரிந்துரையின் பேரில், கலைவேந்தனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டார்.
இதனை அடுத்து கலைவேந்தன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பொறையாறு சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.