ADDED : செப் 14, 2024 10:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மணல்மேடு:மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு வடகாளி கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி, 57; கூலி தொழிலாளி. இவரது மனைவி, 20 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்ற நிலையில், இரு மகள்களை வெளியூரில் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
தாய் பார்வதியுடன் வசித்தார். கலியமூர்த்தி வீட்டை, அவரது சித்தப்பா சுப்ரமணியன், 90, குடும்பத்தினர் எழுதி கேட்டனர்.
இந்நிலையில், சுப்ரமணியன், அவரது மகன் கருணாநிதி, 49, மருமகன் சேட்டு, 59, ஆகியோர் நேற்று முன்தினம், வயலுக்கு சென்ற கலியமூர்த்தியை, வாழை தோப்பில் கட்டி வைத்து, கட்டை, இரும்பு கம்பியால் தாக்கினர்.
கலியமூர்த்தி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் இறந்தார். மணல்மேடு போலீசார், சுப்ரமணியன், கருணாநிதி, சேட்டு ஆகியோரை கைது செய்தனர்.