/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
இளைஞர் கொலை வழக்கில் மேலும் மூவருக்கு குண்டாஸ்
/
இளைஞர் கொலை வழக்கில் மேலும் மூவருக்கு குண்டாஸ்
ADDED : மே 16, 2024 02:29 AM
மயிலாடுதுறை:மயிலாடுதுறை இளைஞர் கொலை வழக்கில் மேலும் மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
மயிலாடுதுறை கலைஞர் நகர் அஜித்குமார்,26; கடந்த மார்ச் 20ம் தேதி இரவு திருவிழந்துாரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவருடன் வந்த சரவணன் படுகாயமடைந்தார்.
இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிந்து 11 பேரை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். அவர்களில், சந்திரமோகன்,29; சதீஷ்,22; ஸ்ரீராம்,26; சந்திரமவுலி,24; மோகன் தாஸ்,28; பாலாஜி,29; ஆகிய 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
இந்நிலையில் இவ்வழக்கில் சிறையில் உள்ள சத்தியநாதன்,20; நாகராஜ்,27; சத்தியசீலன்,23; ஆகியோர் எஸ்.பி., மீனா பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகல் திருச்சி சிறையில் உள்ள மூவரிடம் மயிலாடுதுறை போலீசார் வழங்கினர்.