/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
நூதன முறையில் பண மோசடி செய்த ஆந்திராவைச் சேர்ந்த இருவர் கைது
/
நூதன முறையில் பண மோசடி செய்த ஆந்திராவைச் சேர்ந்த இருவர் கைது
நூதன முறையில் பண மோசடி செய்த ஆந்திராவைச் சேர்ந்த இருவர் கைது
நூதன முறையில் பண மோசடி செய்த ஆந்திராவைச் சேர்ந்த இருவர் கைது
ADDED : செப் 03, 2024 06:50 AM

மயிலாடுதுறை : மயிலாடுதுறை அடுத்த புத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர்- ரேணுகாதேவி தம்பதியரின் 9 வயது மகள் மனலம் பாதிக்கப்டுள்ளார். இந்நிலையில், தம்பதியினரை அணுகிய ஆந்திராவை சேர்ந்த இருவர் சிறுமிக்கு சிகிச்சை அளித்து 6 மாதத்தில் குணமாக்குவதாக கூறி, ரூ.84 ஆயிரம் பணத்தை வாங்கிக் கொண்டு சென்றவர்கள் திரும்பி வரவில்லை.
இதுகுறித்து ராஜசேகர் அளித்த புகாரின்பேரில் மணல்மேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில் கிடைத்த தகவலின்பேரில், புதுக்கோட்டையில் சுற்றி வந்த மோசடி ஆசாமிகளான ஆந்திர மாநிலம் சத்திய சாயி மாவட்டம் இந்துபூரை சேர்ந்த சிவப்பா மகன் மஞ்சுநாதன்,42; சன்னப்பா மகன் அன்னப்பா,44; ஆகியோரை பிடித்து, ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.