/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
டூ - வீலர் விபத்தில் இரு வாலிபர்கள் பலி
/
டூ - வீலர் விபத்தில் இரு வாலிபர்கள் பலி
ADDED : மார் 31, 2024 03:25 AM
மயிலாடுதுறை, : சீர்காழி அருகே கபடி போட்டியில் கலந்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் ஊர் திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் இரு வாலிபர்கள் உயிரிழந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா திருமுல்லைவாசல் மீனவர் தெருவை சேர்ந்தவர் கண்ணதாசன் மகன் கவின்.17, அகோரமூர்த்தி மகன் ஜஸ்வந்த்,20, காளிதாஸ்,24. மூவரும் நேற்று காலை சீர்காழியிலிருந்து திருமுல்லைவாசல் நோக்கி பல்சர் பைக்கில் சென்றனர்.
வழுதலைக்குடி கிராமத்தில் எதிர்பாராத விதமாக நிலை தடுமாறிய பைக், சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த கவின், ஜஸ்வந்த் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
காயமடைந்து உயிருக்கு போராடிய காளிதாசை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தகவல் அறிந்து வந்த சீர்காழி போலீசார், விபத்தில் இறந்த இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், மூவரும் சின்னங்குடியில் நடைபெற்ற கபடி போட்டியில் பங்கேற்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அதிவேகத்தில் வந்தபோது விபத்து நடைபெற்றது தெரிய வந்தது.

