/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
மின்கட்டணம் உயர்ந்தது ஏன்? தமிழக காங்., தலைவர் சப்பைகட்டு
/
மின்கட்டணம் உயர்ந்தது ஏன்? தமிழக காங்., தலைவர் சப்பைகட்டு
மின்கட்டணம் உயர்ந்தது ஏன்? தமிழக காங்., தலைவர் சப்பைகட்டு
மின்கட்டணம் உயர்ந்தது ஏன்? தமிழக காங்., தலைவர் சப்பைகட்டு
ADDED : ஜூலை 25, 2024 10:11 PM
மயிலாடுதுறை,:உதய் மின் திட்டத்தில் அ.தி.மு.க., கையெழுத்திட்டதால் தான் மின்கட்டணம் உயர்ந்துள்ளது என தமிழக காங்., தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.
மயிலாடுதுறையில் வளர்ச்சி திட்ட பணிகளை காங்., மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையிலான தமிழ்நாடு சட்டப் பேரவை பொது கணக்கு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
காங்., தேர்தல் அறிக்கையை காப்பியடித்து மத்திய பட்ஜெட்டில் கூறியுள்ளனர். பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. 2004 முதல் 2009ம் ஆண்டு வரையிலான காங்., - தி.மு.க., கூட்டணி ஆட்சியில் தகவல் அறியும் உரிமை சட்டம், கல்வி உரிமை சட்டம், உணவு உரிமை சட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இதுகுறித்து எல்லாம் சொல்லாமல் தமிழக பா.ஜ., தலைவர் உண்மைக்கு புறம்பாக பேசி வருவது கண்டிக்கத்தக்கது. ரயில்வே பாதுகாப்பு நிதியை வேறு வகையில் செலவு செய்துள்ளதாக சி.ஏ.ஜி., அறிக்கை சொல்கிறது. இதற்கெல்லாம் பா.ஜ.,வினர் பதில் கூற வேண்டும்.
ஜெயலலிதா இருக்கும் வரை தமிழக உரிமை பறிக்கப்படும் என்பதால் மத்திய அரசின் உதய் மின் திட்டத்தில் கையெழுத்திடவில்லை. அவர் இறந்த பிறகு அ.தி.மு.க., கையெழுத்திட்டதால் தான் தற்போது மின் கட்டணம் உயர்ந்துள்ளது.
பிற்போக்குவாதியான பா.ம.க., தலைவர் அன்புமணி, பட்ஜெட்டில் தமிழகம் குறித்து சொல்லி இருக்க வேண்டுமானால் எங்களுக்கு 25 எம்.பி.,க்களை கொடுத்திருக்க வேண்டும் என கூறியுள்ளார். 25 எம்.பி.,க்களை கொடுக்காவிட்டால் தமிழகம் புறக்கணிக்கப்படுமா? தமிழக மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டுள்ளனர். 2026 சட்டசபை தேர்தலில் டெபாசிட் வாங்க முடியாத வகையில் மக்கள் தீர்ப்பளிப்பார்கள் என்றார்.