/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
நான்கு வழிச்சாலையால் 10 கிராம் சாலை துண்டிப்பு- சுரங்கப்பாதை அமைக்கக்கோரி சாலை மறியல்

ADDED : ஆக 13, 2024 04:51 PM

சீர்காழி அருகே நான்கு வழிச்சாலையால் பத்துக்கு மேற்பட்ட கிராமங்களுக்கான சாலை துண்டிக்கப்பட்டது. இதனால், சுரங்கப்பாதை அமைத்து தர கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா செம்பதனிருப்பு கிராமத்தின் வழியே நான்கு வழி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. செம்பதனிருப்பு - நாங்கூர் இடையே உள்ள சாலை துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்காமல் நான்கு வழி சாலை பணிகள் முழு வீச்சில் நடைபெறுகிறது.
இன்று செம்பதனிருப்பில் சுரங்கப்பாதை அமைத்து தர வலியுறுத்தி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சீர்காழி-நாகை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சீர்காழி தாசில்தார், வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் பாகசாலை போலீசார், 20ம் தேதி பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர் . மக்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்..