/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
சீர்காழி ரயில் நிலையத்தின் 148 ஆண்டு துவக்க நாள் விழா கொண்டாட்டம்
/
சீர்காழி ரயில் நிலையத்தின் 148 ஆண்டு துவக்க நாள் விழா கொண்டாட்டம்
சீர்காழி ரயில் நிலையத்தின் 148 ஆண்டு துவக்க நாள் விழா கொண்டாட்டம்
சீர்காழி ரயில் நிலையத்தின் 148 ஆண்டு துவக்க நாள் விழா கொண்டாட்டம்
ADDED : ஜூலை 01, 2024 07:25 PM

மயிலாடுதுறை :சீர்காழி ரயில் நிலையத்தின் 148 ஆண்டு துவக்க நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது சோழன் விரிவுரையில் பயணித்த பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.
1877 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி சீர்காழி ரயில் நிலையத்தில் முதல் ரயில் சேவை துவங்கப்பட்டதை நினைவு கூறும் வகையில் 148 ஆம் ஆண்டு துவக்க விழாவை ரயில் பயணிகள் சங்கம் சார்பாக கொண்டாடப்பட்டது.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில் நிலையத்தில் வாழை கன்று தோரணங்கள் கட்டி விழாக்கோலத்தில் காட்சி அளித்தது. சென்னையில் இருந்து திருச்சி சென்ற சோழன் விரைவு ரயிலில் சீர்காழி வந்தடைந்த பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி சீர்காழி கோட்ட ரயில் பயனாளர்கள் சங்கம் சார்பாக வரவேற்றனர்.முன்னதாக சீர்காழி ரயில் நிலையத்தில் மரக்கன்று நடப்பட்டது இதில் சீர்காழி ரயில் பயனாளர்கள் சங்கம் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.