ADDED : ஜன 18, 2025 09:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலாடுதுறை: சீர்காழி அருகே கடலில் குளித்த போது அலையில் சிக்கிய தாய், அவருடைய மகன்கள் உள்ளிட்ட 5 பேரை மீனவர்கள் உதவியுடன் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மீட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கோவில்பத்து கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் மனைவி வித்தியா.35, மகன்கள் தசன் ராஜ்.12, சஞ்சய்.12, மணிகண்டன்.13, மற்றும் உறவினர் விமல்.27. ஆகிய 5 பேரும் கூழையார் கடற்கரைக்கு சென்று கடலில் குளித்துள்ளனர்.
அப்போது அலையில் சிக்கி போராடியவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மீனவர்கள் உதவியுடன் நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்டு, பாதுகாப்பற்ற சூழலில் கடலில் குளிக்க வேண்டாம் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் வெகுவான பாராட்டை பெற்றுள்ளது