ADDED : ஜூலை 08, 2026 07:35 AM
அ நிறம் | அளவு
மயிலாடுதுறை: மயிலாடுதுறை எஸ்.பி., சினேஹா பிரியா உத்தரவின்பேரில், தனிப்படை போலீசார் நேற்று இரவு, அடியாமங்கலம் பகுதியில் நின்றிருந்த காரை சோதனை செய்தனர்.
அதில், 50 கிலோ விலை உயர்ந்த கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதையடுத்து, காருடன் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த பிரபல கஞ்சா வியாபாரி மயிலாடுதுறை ஒத்தசரக தெருவை சேர்ந்த கணபதி, 35; உள்ளிட்ட 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி காரில் கடத்தி வந்தது தெரி யவந்துள்ளது.
