ADDED : மார் 22, 2026 04:25 PM
அ நிறம் | அளவு
மயிலாடுதுறை : சீர்காழி அருகே, ரசீது இல்லாமல் கொண்டு வரப்பட்ட, 56 காஸ் சிலிண்டர்களை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோவில் புறவழிச்சாலையில், தேர்தல் பறக்கும் படையினர், நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மயிலாடுதுறை நோக்கி சென்ற லோடு வேனை நிறுத்தி சோதனை நடத்தியதில், வணிக பயன்பாட்டிற்கான, 56 காஸ் சிலிண்டர்களை, உரிய ரசீது இல்லாமல் ஏற்றிச்சென்றது தெரிந்தது. சிலிண்டர்களுடன் வந்த லோடு வேனை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், சீர்காழி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
