ADDED : ஏப் 19, 2025 01:06 AM
மயிலாடுதுறை:குத்தாலம் அருகே தெரு நாய்கள் கடித்ததில் 7 பேர் காயமடைந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம,் குத்தாலம் அருகே தொழுதாலங்குடி சுற்றுவட்டார மக்கள் நேற்று காலை வழக்கம் போல் தேரழுந்தூர் கடைவீதிக்கு டீ குடிக்கவும், பொருட்கள் வாங்கவும் வந்தனர். அவர்களை அங்கு சுற்றித்திரிந்த தெரு நாய்கள் கடித்து குதறின.
இதில் பிடாரி கோவில் வீதி வசந்தா,60; சர்வ மானியம் ராஜலட்சுமி,60; தென்பாதி ரவி,55; அர்ஜுனன்,64; காஸ்ட்ரோ,13; தொழுதாலங்குடி விஜயகுமாரி,56; செல்வம்,65; ஆகிய 7 பேர் காயமடைந்தனர். அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் அனைவரும் குத்தாலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மேலும் தெரு நாய்கள் 2 ஆடுகள் மற்றும் 1 மாட்டை கடித்து குதறியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். தொடர்ந்து நாய்கள் கடித்து பலரும் காயமடைந்த நிலையில் அவற்றை ஊராட்சி நிர்வாகம் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

