/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
ஆவணம் இன்றி ஒரு டன் வெடி பொருள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
/
ஆவணம் இன்றி ஒரு டன் வெடி பொருள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
ஆவணம் இன்றி ஒரு டன் வெடி பொருள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
ஆவணம் இன்றி ஒரு டன் வெடி பொருள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
ADDED : அக் 17, 2024 02:43 PM

மயிலாடுதுறை:சீர்காழியில் உரிய ஆவணங்கள் இன்றி 1 டன் வெடி பொருட்களை ஏற்றி வந்த லாரி பறிமுதல்.
சீர்காழி புறவழிச் சாலை வழியே உரிய ஆவணங்கள் மற்றும் பாதுகாப்பு இன்றி ஒரு டன் வெடிபொருட்களை ஏற்றி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கோவில்பத்து நான்கு வழிச்சாலையில் இன்று காலை போலீசார் வாகன தணிக்கில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்றை போலீசார் நிறுத்தி சோதனை செய்ததில் 40 மூட்டைகளில் ஒரு டன் எடையுள்ள நாட்டு வெடிகள் இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த வெடிபொருட்கள் அனைத்தும் உரிய ஆவணங்கள் என்று பாதுகாப்பற்ற முறையில் ஏற்றி வந்ததும் தெரியவந்தது. இதை எடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் பாதுகாப்பாக மக்கள் நடமாட்டம் இல்லாத தனியார் மனை பிரிவு ஒன்றில் நிறுத்தியதுடன், அருகில் யாரும் செல்லாதவாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து லாரி டிரைவரான புதுச்சேரி காட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்த மணிகண்டன்.30. என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பிடிபட்ட வெடிபொருட்கள் பல லட்சம் ரூபாய் மதிப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. இச்சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.