/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
முகத்துவாரம் தூர்வராவிட்டால் போராட்டம:திருமுல்லைவாசல் மீனவர்கள் எச்சரிக்கை

ADDED : செப் 09, 2024 05:10 PM

மயிலாடுதுறை: திருமுல்லைவாசலில் மீன்பிடித்துறைமுக முகத்துவாரத்தை உடனடியாக தூர்வாராவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருமுல்லைவாசலில் மீன்பிடி துறைமுகத்தில் ,
சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.9 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டது. இந்த தூண்டில் வளைவு முறையாக அமைக்கப்படாததால் முகத்துவாரம் தூர்ந்து மண்மேடுகள் ஏற்பட்டுகிறது. தற்காலிகமாக முகத்துவாரத்தை தூர்வாரி தந்தாலும் அடிக்கடி தூர்ந்து விடுகிறது.
காற்றின் போக்கு காரணமாக தற்போது முகத்துவாரத்தில் அதிக அளவில் மண்மேடுகள் ஏற்பட்டு துறைமுகத்திலேயே மீனவர்கள் படகுகள் அனைத்தையும் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மீன்வளத்துறை உடனடியாக முகத்துவாரத்தை தூர்வார வேண்டும். இல்லையென்றால் கிராமங்களை ஒருங்கிணைத்து போராட்டங்களில் ஈடுபடுவோம் என மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.