/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
மயிலாடுதுறை மருத்துவமனைக்கு ரத்த சேகரிப்பு வேன் அன்பளிப்பு
/
மயிலாடுதுறை மருத்துவமனைக்கு ரத்த சேகரிப்பு வேன் அன்பளிப்பு
மயிலாடுதுறை மருத்துவமனைக்கு ரத்த சேகரிப்பு வேன் அன்பளிப்பு
மயிலாடுதுறை மருத்துவமனைக்கு ரத்த சேகரிப்பு வேன் அன்பளிப்பு
ADDED : ஜன 28, 2025 06:10 AM

மயிலாடுதுறை : மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு, ஸ்ரீ சந்திரசேகரா டிரஸ்ட் சார்பில், 42 லட்சம் ரூபாய் மதிப்பில், வசதிகளுடன் கூடிய நடமாடும் ரத்த சேகரிப்பு வேன் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கொழையூர் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர் ஆடிட்டர், எஸ்.சந்தானகிருஷ்ணன். தற்போது சென்னையில் வசிக்கிறார்.
இவர் தன் வருமானத்தின் பெரும் பகுதியை மருத்துவம், கல்வி, ஆன்மிகம் உள்ளிட்ட பணிகளுக்கு செலவிடுகிறார். தன் பூர்வீக மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் பல நலத்திட்ட பணிகளை செய்கிறார்.
இந்நிலையில், ஆடிட்டர் சந்தானகிருஷ்ணன் தன், ஸ்ரீ சந்திரசேகரா டிரஸ்ட், பி.கே.எப்., மற்றும் ஆர்கியான் கெமிக்கல்ஸ் மூலம், 42 லட்சம் ரூபாய் மதிப்பில், நவீன வசதிகளுடன் கூடிய நடமாடும் ரத்த சேகரிப்பு வேனை, மயிலாடுதுறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு நேற்று வழங்கினார்.
இந்த வேன், 3 கொடையாளர்களிடம் ஒரே நேரத்தில் ரத்தம் சேகரிக்கும் வசதி கொண்டது.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் பானுமதி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., உமா மகேஸ்வரியிடம், ஆடிட்டர் சந்தானகிருஷ்ணன், நடமாடும் ரத்த சேகரிப்பு வேனின் ஆவணங்கள் மற்றும் சாவியை வழங்கினார்.
தொடர்ந்து, மருத்துவமனை சி.எம்.ஓ., டாக்டர் மருதவாணனிடம் அவை ஒப்படைக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கொழையூர் ஸ்ரீதர், டாக்டர் ராஜசேகர், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ஆசைமணி, குத்தாலம் கல்யாணம், ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் அருண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

