ADDED : ஏப் 30, 2026 11:39 PM
சீர்காழி: சீர்காழி அருகே, கார் கவிழ்ந்த விபத்தில், வாலிபர்கள் இருவர் உயிரிழந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே, கோனையாம்பட்டினத்தை சேர்ந்தவர் நிஜந்தன், 18; மீனவர்.
அவரது நண்பர்கள் கீழமூவக்கரையை சேர்ந்த ஹரிஷ், 17; உதயநிதி, 17; ஆகியோருடன், காரில் நேற்று முன்தினம் மாலை, சிதம்பரம் நோக்கி சென்றார்.
சீர்காழி அருகே, நிஜந்தனின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து, விபத்துக்குள்ளானது.
இதில், காயமடைந்த மூவரையும், அக்கம்பக்கத்தினர் மீட்டு, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வழியிலேயே ஹரிஷ் உயிரிழந்தார். மற்ற இருவரும் மேல் சிகிச்சைக்காக, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு, நேற்று நிஜந்தன் உயிரிழந்தார். உதயநிதி சிகிச்சையில் உள்ளார். ஆணைக்காரன் சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
