/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
தாமதமாக கடையணைக்கு வந்த காவிரி நீர்- மலர் தூவி கடலுக்கு அனுப்பி வைத்த அதிகாரிகள்- விவசாயிகளாக மாறிய உதவியாளர்கள்.

ADDED : ஆக 06, 2024 06:28 PM
eமயிலாடுதுறை: திருச்சி முக்கொம்பில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.
வினாடிக்கு பல லட்சம் கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றின் வழியே வீணாக கடலில் கலந்த நிலையில் தாமதமாக காவிரி ஆற்றில் வந்த தண்ணீர் இன்று அதிகாலை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மேலையூர் கடையனையை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு மயிலாடுதுறை நீர்வளத்துறை செயற்பொறியாளர் மாரிமுத்து தலைமையில் பாரம்பரிய முறைப்படி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதனை அடுத்து கடையனை மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் பாசனம் மற்றும் கடலுக்கு திறந்து விடப்பட்டது. அப்போது நீர்வளத்துறை அதிகாரிகள் மலர்கள் மற்றும் நெல் விதைகளை தூவி விவசாயம் செழிக்க வேண்டினர். கடையனை திறப்பிற்கு விவசாயிகள் யாரும் அழைக்கப்படாத நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மயிலாடுதுறை உதவி செயற்பொறியாளர் ஜெயராமன் விவசாயிகள் இல்லாமல் தண்ணீர் திறப்பதா என கேள்வி எழுப்பியதுடன், அலுவலகத்தில் இருந்த பச்சை துண்டுகளை அணிவித்து நீர்வளத்துறை உதவியாளர்களை விவசாயிகளாக மாற்றி நிகழ்ச்சியை நடத்தி முடித்தார். இதில் மேலையூர் நீர்வளத்துறை உதவி பொறியாளர் சண்முகம் உன்னிட்ட பலரும் கலந்து கொண்டனர்.